இதை எழுத கஷ்டப்படும் கூட்டத்தைவிட சொல்ல கஷ்டப்படும் கூட்டம்தான் அதிகம். நாம் மட்டுமே பேசுகின்ற தமிழை மற்றவர்கள் கற்றுக்கொள்ள, நாம் மட்டும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவதை மிக பெருமையாக நினைக்கிறோம். நம்மினத்திடையே தமிழ் பேசுவதற்குக் கூட சிலர் கேவலமாக நினைக்கிறார்கள். இவர்களை போன்றவர்களுக்கு, "7ஆம் அறிவு"அல்ல "9ஆம் அறிவு" என்று படம் எடுத்தால் கூட திருத்த முடியாது. சுத்த தமிழில் பேசி அறுக்கிறேனா....ஒகே..ஓகே ஸோரி வாங்க நம்ப தமிழுக்கு போகலாம்.
தமிழுக்கு அழகை சேர்ப்பது "ழ"..! இது "ழ" படத்தின் போட்டம் லைன். ஆனா இங்க நான் சொல்ல போற கதையே வேற....இது எனக்கு ஒருத்தர் சொன்ன ஜோக். கொஞ்சம் சிரிக்கலாமே...வாங்க..:)
ஓரு ஊரில் ஒரு திருமண வைபவம் நடந்துக்கொண்டிருந்தது. நண்பரின் கல்யாணத்திற்கு வருகை புரிந்திருந்தார், ஒரு தமிழ் வாத்தியார். அப்போது அங்கு ஒரு சின்ன பையனின் குரல் கேட்டு திரும்பினார்.
சிறுவன் : "வாயப்பயம்" எடுத்துக்குங்க சார்...!
இவர் : என்ன "வாயப்பயமா"? என்னப்பா சொல்ற..?
(அவன் வைத்திருந்த தட்டை கவனித்தார். அதில் 2 சீப்பு வாழைப்பழம் இருந்தது. சிரித்தபடியே ....)
இவர் : வாயப்பயம் இல்லப்பா...வாழைப்பழம்...!
சிறுவன் : அதான் சார்....வாயப்பயம்.
வாத்தியார் பல தடவை திருத்தமாக சொல்லியும், அந்த சிறுவன் "வாயப்பயம்" என்றே சொல்ல கோபத்தில் எழுந்த அந்த வாத்தியார் "உன் அப்பா எங்கே..? அவரை நான் பார்க்கணும்" என்றார். சிறுவன் அழைத்துச் சென்றான்.
வணக்கம் வைத்துவிட்டு ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
இவர் : என்ன சார் உங்க பையன் வாழைப்பழத்தை..."வாயப்பயம்" என்கிறான்...?
அப்பா : ஒ...அதுவா...அவன் "பயக்க வயக்கமே" அப்படிதான் சார்...!
இவர் : சார்...அது பழக்க வழக்கம் சார்...!
அப்பா : ஆமா சார்...அதே தான்...!
வாயடைத்துப்போன வாத்தியார்...பேசாமல் அவரது இருக்கையில் வந்து அமர்ந்தார். "இவங்களுக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலயா...இல்ல நம்ப சொல்றது இவங்களுக்கு வேற மாதிரி கேட்குதா..." என்று மனதுக்குள்ளே பேசிக்கொண்டார். "ழ...ழ...ழ..." என தன் உச்சரிப்பு சரியாக இருக்குதா என்பதை உச்சரித்து பார்த்தார்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அவரை பார்த்தார். "என்ன சார் தொண்டை அரிக்குதா?" என்று கேட்டார். இல்லை என தலையை ஆட்டி சிரித்தபடியே, அவரிடம் பேசி அறிமுகம் ஆனார். அவர் அந்த ஊர் பள்ளியின் தமிழ் வாத்தியார் என தெரிந்துக்கொண்டார். இவரிடம் சொல்வதுதான் சரி என யோசித்து பேசினார்.
இவர் : சார், என்ன சார் உங்க ஊருல...தமிழை வித்தியாசமா பேசுறாங்க..
வாத்தியார் : எப்படி..?
இவர் : வாழைப்பழத்தை...."வாய பயம்"ன்னு சொல்றாங்க...... பழக்க வழக்கத்தை "பயக்க வயக்கம்" ன்னு சொல்றாங்களே...! நீங்க கவனிக்கலையா?
வாத்தியார் : அதான் சார் எனக்கும் ஒரே "குயப்பமா" இருக்கு..!
இவர் : ..............................!!!! (ஷாக் அடித்தது போல் ஆனார்)
-முற்றும்-
"ழ" என்ற உச்சரிப்பு ஆங்கிலத்தில் இல்லை. அதனால் தான் தமிழில் இல்லாத ஆங்கில உச்சரிப்பான "Z" ஐ, தமிழை ஆங்கிலத்தில் எழுதும்போது "ழ"வுக்காக பயன்படுத்துகிறோம்.

No comments:
Post a Comment