This is the theme song for the World Classical Tamil Conference to be held in Coimbatore in June 2010, encapsulating the contributions of Tamil culture and literature down the ages.
http://www.arrahman.com/v2/discography/singles-semmozhi.html
Song : Semmozhiyaane Tamilmozhiyaam...!
Music : AR Rahman
Lyrics : Kalaignar Karunanidhi (Tamil Nadu CM)
Director : Goutham Menon
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே யாவரும் கேளீர் உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றே என உரைத்து வாழ்ந்தோம் – உழைத்து வாழ்வோம் தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும் நன்மொழியே நம் பொன் மொழியாம் போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் செம்மொழியான தமிழ் மொழியாம்… ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் செம்மொழியான தமிழ் மொழியாம்… கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும் எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும் புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி செம்மொழியான தமிழ் மொழியாம்… அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி - ஓதி வளரும் உயிரான உலகமொழி நம் மொழி – நம் மொழி – அதுவே செம்மொழியான தமிழ் மொழியாம்… தமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியாம் தமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம் வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே… செம்மொழியான தமிழ் மொழியாம்… |
No comments:
Post a Comment